உள்நாட்டு செய்தி
லிந்துலையில் துயரச் சம்பவம்..!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேன பிரதேசத்தில் ஆக்ரா ஓயாவில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்று (25) இந்த சிறுவன் மேலும் 5 சிறுவர்களுடன் நீராடச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மாணவன், ஓடையில் ஆழமான பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியாவைச் சேர்ந்த தினுக கமகே என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.