உள்நாட்டு செய்தி
மகன் சுத்தியலால் அடித்துக் கொலை; சந்தேகத்தில் தந்தை கைது ?
கும்புக்கேட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல, நெல்லிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 36 வயதுடைய நபர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் பெறுவதற்காக தந்தையிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்துவந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவத்தன்று தந்தையிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாகவும், அப்போது வீட்டில் இருந்த சுத்தியலால் தந்தை தலையில் அடித்ததாகவும் பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது .சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சந்தேகத்தின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
Continue Reading