உள்நாட்டு செய்தி
மரக்கறிகளின் விலைகள் சற்று வீழ்ச்சி !
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலை இன்று சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கெரட் 400 – 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 550 ரூபாயாக பதிவாகியுள்ளது. ஒரு கிலோகிராம் கோவா 300 – 400 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 200 – 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் ஒரு கிலோகிராம் தக்காளி 700 – 800 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.