உள்நாட்டு செய்தி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குழப்பநிலை! அழைக்கப்பட்ட பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் மேற்கொண்ட குழப்பத்தினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
சிற்றூழியர்கள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை இன்று (16) பிற்பகல் அவரது அலுவலகத்தில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதற்றமான சூழல் உருவானதுடன், அதனை கட்டுப்படுத்த பொலிஸ் கலகத்தடுப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது குறித்த நிலை சற்று தணிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், வைத்தியர்களுக்கு வழங்கப்படும் டெட் கொடுப்பனவை போன்று தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 72 சுகாதார சங்கங்கள் கடந்த 13ஆம் திகதி முதல் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.