உள்நாட்டு செய்தி
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (16.02.2024) பிற்பகல் 4.30 மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பணவை அதிகரிக்க கோரியும், பல்கலைக்கழக விடுதி வசதி இன்மை பிரச்சினைகள், சுகாதார வசதியின்மை, உணவு பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளாவன,
01. தற்போது வழங்கப்படும் மகாபொல கொடுப்பனவான 5000 ரூபா அதிகரிக்கப்பட வேண்டும்.
02. புதியதாக இணைந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 6 மாதமாக மகாபொல வழங்கப்படவில்லை.