உள்நாட்டு செய்தி
ஆறாம் தரத்தில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான அறிவிப்பு !
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்களை 2024 ஆம் ஆண்டு ஆறாம் தரத்தில் சேர்ப்பது தொடர்பான மேன்முறையீடுகளை இன்று முதல் சமர்ப்பிக்க முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த விண்ணப்பங்கள் தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 29ஆம் திகதி வரை இணையவழியாக அனுப்பி வைக்க முடியும் எனவும் அந்த அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம், கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்துக்கு பிரவேசித்து 3 பாடசாலைகளுக்காக மாத்திரம் மேன்முறையீட்டை சமர்ப்பிக்க முடியுமெனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.