உள்நாட்டு செய்தி
முட்டை விலை அதிகரிப்பு?
இந்த வருடம் இறக்குமதி செய்யப்பட்ட 7 மில்லியன் முட்டைகள் எதிர்வரும் வாரத்தில் லங்கா சதொச சிறப்பங்காடிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் அண்மித்து வருவதனால் சந்தையில், முட்டைகளின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சதொச சிறப்பங்காடிகளிலும், சில்லறை வர்த்தக நிலையங்களிலும் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடிவதில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அதேநேரம், நாளை திங்கட்கிழமை முதல் உள்ளூர் முட்டை ஒன்றின் விலை 65 ரூபாவாக அதிகரிக்கலாம் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் எதிர்வுகூறியுள்ளது.