உள்நாட்டு செய்தி
6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு..!
ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக,
இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது .
இதன்படி, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட உளுந்து, இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் மொத்த விலை பட்டியல் பின்வருமாறு
📍காய்ந்த மிளகாய் கிலோ ரூ.870
📍வெள்ளை சீனி கிலோ ரூ.265
📍இறக்குமதி செய்யப்படும் உளுந்து கிலோ ரூ.900
📍பெரிய வெங்காயம் கிலோ ரூ.320
📍உருளைக்கிழங்கு கிலோ ரூ.120
📍பருப்பு கிலோ ரூ.295