உள்நாட்டு செய்தி
தக்காளி விலை அதிகரிப்பு !
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் தக்காளியின் விலை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இந்தநிலையில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக பெய்த கனமழை காரணமாக நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட தக்காளி செய்கை பதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.