உள்நாட்டு செய்தி
சுதந்திரத் தினத்திற்கான ஒத்திகை நடவடிக்கை – விசேட போக்குவரத்து ஒழுங்கமைப்பு
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நடவடிக்கைகளுக்காக விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாளை முதல் எதிர்வரும் 4ஆம் திகதிவரை இந்த போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலி வீதியின் சில பகுதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும் பல கட்டங்களின் கீழ் நாளை முதல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிவரை மூடப்படவுள்ளன .