உள்நாட்டு செய்தி
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடி படகை விடுவிக்க கூட்டு கடற்படையின் உதவியைக் கோரும் இலங்கை!
இலங்கையின் பலநாள் மீன்பிடி படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டமை தொடர்பில் விசாரிக்குமாறு பஹ்ரைனில் உள்ள 39 நாடுகளின் கூட்டு கடற்படைக்கு கடற்படையிடம் கோரப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். சோமாலிய கடற்கொள்ளையர்களால் 6 மீனவர்களுடனான இலங்கையின் பலநாள் மீன்பிடி படகொன்று கடத்தப்பட்டுள்ளதாக கடற்தொழில் திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது. அதற்மைய, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 12ஆம் திகதி புறப்பட்டுச் சென்றிருந்த ‘லொரென்சோ புதா – 4’ என்ற பல நாள் மீன்பிடி படகொன்றே இவ்வாறு 6 மீனவர்களுடன் கடத்தப்பட்டுள்ளது.