Connect with us

உள்நாட்டு செய்தி

கண்டி – கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான அறிவிப்பு !

Published

on

நிட்டம்புவ ஶ்ரீ விஜயராம விகாரையின் பெரஹரா காரணமாக கண்டி – கொழும்பு பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து இன்று (27) இரவு மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, இன்றிரவு 07 மணி முதல் இரவு 8.30 வரை பெரஹரா இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரஹரா நிட்டம்புவ மல்வத்த ஶ்ரீ போதி விகாரையிலிருந்து கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ முச்சந்தி வரை – அத்தனகல்ல வீதியூடாக பயணித்து நிட்டம்புவ மல்வத்த ஶ்ரீ போதி விகாரைக்கு மீண்டும் செல்லவுள்ளது.

இதன்போது, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடமும் பொதுமக்களிடமும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *