உள்நாட்டு செய்தி
பவதாரணியின் திடீர் மரணம்: கொழும்பில் நடத்தப்படவிருந்த இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இலங்கையில் நாளை(27) மற்றும் நாளை மறுதினம்(28) நடத்தப்படவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விழா ஏற்பாட்டுக் குழுவினர் இதனை தெரிவித்தனர்.
மேலும், மீண்டும் நிகழ்ச்சி நடத்தப்படும் திகதிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.
இந்த நிலையிலேயே இலங்கையில் நடத்தப்படவிருந்த இசை நிகழ்ச்சி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது