உள்நாட்டு செய்தி
செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய சுற்றுலா பயணி,ரயிலில் இருந்து தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதி.!
செல்ஃபி எடுக்க முயன்ற ரஷ்ய சுற்றுலா பயணி ரயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.
காயமடைந்த சுற்றுலா பயணி 25 வயதான ரஷ்ய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரதம் சென்றுகொண்டிருந்த போது சுற்றுலா பயணி செல்ஃபி எடுக்க முற்பட்ட போது எல்லக்கு அருகில் தவறி விழுந்துள்ளார்.
சம்பவத்தை தொடர்ந்து சுற்றுலா பயணி தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு நாள் விஜயமாக ஹிக்கடுவையிலிருந்து எல்லக்கு பயணித்த போதே இந்த அசம்பாவித சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.