உள்நாட்டு செய்தி
தமது மூன்று பிள்ளைகளையும் அறைக்குள் பூட்டிவைத்துவிட்டு, புனித யாத்திரை சென்ற பெற்றோர் கைது..!
குளியாப்பிட்டி, தீகல்ல பிரதேசத்தில் தமது மூன்று பிள்ளைகளையும் மூடிய அறைகளுக்குள் பூட்டிவைத்துவிட்டு,
நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சிவனொளிபாத மலைக்கு புனித யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர்.
மூன்று பிள்ளைகளும் 8, 5 மற்றும் 3 வயதுடையவர்கள் எனவும் பொலிஸ் அவசர சேவை 119 ஊடாக,
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் அவர்களை பொலிஸார் பொறுப்பேற்றதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த வீட்டின் கதவை உடைத்து பிள்ளைகளை மீட்டதுடன்,
பூட்டிவைக்கப்பட்டிருந்தமையினால் பயத்தினால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளுக்கும் பிஸ்கட், பாண் போன்றவற்றை உணவாக வைத்துவிட்டு, பெற்றோர்கள் புனித யாத்திரை சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (24) வீடு திரும்பிய பெற்றோரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.