உள்நாட்டு செய்தி
நுவரெலியாவில் மரக்கறிகளின் விலையில் வரலாறு காணாத உயர்வு
நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வடைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளனர்.
அதிகரித்துள்ள விலை
இதன்படி, இன்று ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1800 ரூபாவாகவும், முட்டைக்கோவா 680 ரூபாயாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் 500 ரூபாயாகவும் உள்ளது.
இவ்வளவு அதிக மொத்த விலைக்கு சில்லறை விற்பனை செய்வது எங்களுக்கு கடினம். வாடிக்கையாளர்கள் வருவதில்லை, வாடிக்கையாளர்கள் நல்ல காய்கறிகளை தேடி அலைகின்றனர் ஆனால் தற்போதைய காய்கறிகள் தரமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த காய்கறிகளை இவற்றை 70-100 ரூபாய் லாபத்துடனேயே விற்பனை செய்கிறோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.