உள்நாட்டு செய்தி
தென்னிலங்கை அதிவேகப் பாதையில் பற்றி எரிந்த சொகுசு பேருந்து
தென்னிலங்கை அதிவேகப் பாதையின் பெலியத்தை இடமாறல் நுழைவுப் பாதை அருகே சொகுசுப் பேரூந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இது தொடர்பான காணொளிக் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.
இந்த விபத்து தென்னிலங்கை அதிவேகப் பாதையின் பெலியத்தை நுழைவுப் பாதை அருகே இன்றைய தினம் (15.1.2024) முற்பகல் நடைபெற்றுள்ளது.
திடீரென தீப்பற்றி விபத்து
இதன்போது பதுளையில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேரூந்து ஒன்றே திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
எனினும் தீ முழுமையாகப் பரவி, பேரூந்து முற்றாக தீப்பிடிக்கும் முன்பாக அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பான முறையில் இறக்கப்பட்டு விட்டதாகவும், பயணிகள் எவருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் அதிவேகப் பாதை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.