உள்நாட்டு செய்தி
மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் பிரேரணை தொடர்பான அறிக்கை
ஜனவரியில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் பிரேரணை தொடர்பான அறிக்கை, மின்சக்தி மற்றும் போக்குவரத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட இதனை முன்வைத்துள்ளார்.
ஜனவரியில் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பாக மின்சக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவால் 15 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதத்தில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்சார கட்டண திட்டத்தின் திருத்தத்தின் மூலம் மின்சார சபை கணிசமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக அந்த குழு அவதானித்துள்ளது.