உள்நாட்டு செய்தி
மூன்று வெளிநாட்டு இலங்கை தூதரகங்களை மீண்டும் திறக்க அமைச்சரவை அனுமதி
2021/2022 காலப்பகுதியில் தற்காலிகமாக மூடப்பட்ட மூன்று வெளிநாட்டு இலங்கை இராஜதந்திர தூதரகங்களை மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பின்வரும் இலங்கை தூதரகங்களை மீண்டும் திறக்க வேண்டியதன் அவசியத்தை தாம் அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
1. சைப்ரஸில் உள்ள நிக்கோசியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகம்
2. ஈராக், பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம்
3. ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகம்
இதன்படி, மேற்படி வெளிநாட்டு இராஜதந்திர பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.