உள்நாட்டு செய்தி
காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை
காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு இடையில் மூளைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் மேலும் 8 கைதிகள் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் கடந்த 03 ஆம் திகதி மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இந்தநிலையில்,காலி சிறைச்சாலையின் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.