உள்நாட்டு செய்தி
இசை ஆசிரியர் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது
கொழும்பு 07, விஜேரம மாவத்தையில் உள்ள வீடொன்றில் வைத்து 75 வயதுடைய இசை ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச் செயல் தொடர்பில் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரால் திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசி, மடிக்கணினி மற்றும் இரண்டு எரிவாயு சிலிண்டர்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்