உள்நாட்டு செய்தி
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான காரணம்
வற் வரி அதிகரிப்பின் காரணமாகவே லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வற் வரி அதிகரிக்கப்படாமல் இருந்திருந்தால், 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ எரிவாயுவின் விலை 685 ரூபாவினால் குறைக்கப்பட்டு இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வற் வரி விதிப்பு நடைமுறைப்படுத்தாமல் இருந்திருப்பின், 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரை 3,700 ரூபாவிற்கு வழங்கி இருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எரிவாயு மீது வற் வரி விதிக்கப்பட்டமையே விலை அதிகரிப்பிற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.