உள்நாட்டு செய்தி
மதுபானங்களின் விலை அதிகரிப்பு!
மதுபானங்களின் விலையை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஸ்டில்லரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
375 மில்லி மது போத்தல் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் 180 மில்லி மது போத்தல் ஒன்றின் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஓருவர் தெரிவித்துள்ளார்..
ஜனவரி 1, 2024 முதல் புதிய கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என்றும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வட்) அதிகரிப்பை கருத்தில் கொண்டு மதுபானங்களின் விலையும் திருத்தப்பட்டுள்ளதகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.