உள்நாட்டு செய்தி
யாழ்.மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
யாழ்.மாவட்டத்தில் இன்று(21) மற்றும் நாளைய(22) தினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம்(19) மாத்திரம் யாழ்.மாவட்டத்தில் 111 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.