உள்நாட்டு செய்தி
கொழும்பில் மக்களை மிரட்டி பணம் வசூலித்து வந்தபெண் உள்ளிட்ட 11 பேர் கைது..!
நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூலித்த பெண்ணொருவர் உட்பட 11 பேர் பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும்,
அவர்கள் போதை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பணம் தேடும் நோக்கில் குறித்த இடத்தில் தங்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டி நகரத்திற்கு அருகில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.