உள்நாட்டு செய்தி
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் செயலிழந்துள்ளதால் – நோயாளர்கள் விசனம்
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இயங்கி வரும் சி.டி ஸ்கேன் இயந்திரம் ஒரு மாதத்திற்கும் மேலாக செயலிழந்துள்ளதால் நோயாளர்களின் பராமரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த இயந்திரம் செயலிழந்துள்ளதனால் நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இரத்தினபுரி போதனா வைத்தியாசாலைக்கு புதிய சி.டி ஸ்கேன் இயந்திரத்தினை வழங்குவது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்