உள்நாட்டு செய்தி
மட்டக்களப்பில் வீதி விபத்து : ஸ்தலத்தில் சிறுவன் பலி
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(16.12.2023) இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த விசேட தேவையுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் என்ற 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
பேருந்து தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன் , தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது பிரதான வீதியில் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நால்வர் கொண்ட குடும்பம் அடுத்த வருடம் செலுத்த வேண்டிய வட் வரி தொடர்பில் வெளியான தகவல்
இந்நிலையில் விபத்துக்குள்ளான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பேருந்து சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.