உள்நாட்டு செய்தி
வெல்லம்பிட்டிய மைதானத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு
வெல்லம்பிட்டிய உமகிலிய விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும், துப்பாக்கி வெடிக்காததால் அவரது உயிர் தப்பியதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெல்லம்பிட்டிய ஸ்ரீ ஆனந்தராம மாவத்தையில் வசிக்கும் 31 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நண்பர்களை சந்திப்பதற்காக உமகிலிய மைதானத்திற்கு அருகில் வந்த நபர் மீதே, வெள்ளை ஹெல்மெட் அணிந்து, கருப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்