உள்நாட்டு செய்தி
காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக மீட்பு…!
இரத்தினபுரி – கொலன்ன பிரதேசத்தில் காணாமல் போன பாடசாலை மாணவி ஒருவர் கிங் கங்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொலன்ன பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியாவார்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி காணாமல் போன நிலையில் பெற்றோர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாணவி கிங் கங்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொலன்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.