Connect with us

உலகம்

பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்…!

Published

on

2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது.

கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு,
YouTube, Google Photos, Google Maps, Calendar, Google Slides, Google Sheets உள்ளிட்ட கூகுளின் பல்வேறு தளங்கள் மற்றும் செயலிகளை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், Google நிறுவனம் 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள Google கணக்குகள் நிரந்தமாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கணக்குகளை நிரந்தரமாக நீக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை தொடங்கவுள்ளதால், கூகுள் பயனர்கள் இந்த வார இறுதிக்குள்,
தங்கள் கணக்குகளில் கடவுச்சொல் உள்ளிட்ட விபரங்களை அளித்து உள்ளீடு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *