உள்நாட்டு செய்தி
நுரைச்சோலை அனல் மின்நிலைய செயற்பாடு: மேலும் 14 நாட்கள் தேவை என்கிறது இலங்கை மின்சார சபை
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள் தேவைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அண்மையில் தெரிவித்திருந்தது.
தொழிநுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கியை செயலிழக்கச் செய்யப்படுகிறது.
எனினும் மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் இல்லை என்றும், பராமரிப்பு காலத்தில் அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து தொடர்ந்து மின்சாரம் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தித்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி எதிர்வரும் 29ஆம் திகதி தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.