உள்நாட்டு செய்தி
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாயும் மகனும் 5 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகையுடன் கைது..!
போலியான அடையாள அட்டை மற்றும் முகவரியை வழங்கி வங்கிக் கணக்கு ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட தாயும் மகனும் 5 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகையுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக பெற்றுக்கொண்ட 5 கோடியே 11இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபா பணம் மற்றும் தங்க வளையலுடன் சந்தேகநபரும், அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
34 மற்றும் 67 வயதுடைகளையுடைய சந்தேக நபர்கள் இருவரும் அலுபோமுல்ல பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,
பண்டாரகம பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களைப் வங்கிக் கணக்குகள் ஊடாக மேற்கொண்டமை குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவரின் விபரங்களை விசாரித்தபோது போலி அடையாள அட்டை மற்றும் போலி முகவரி மூலம் கணக்குகள் தொடங்கப்பட்டது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.