உள்நாட்டு செய்தி
4 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் இன்றையதினம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 4 கிலோ 470 கிராம் எடையுடைய கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசேட அதிரடி படையினரிடம் பாரப்படுத்தப்படவுள்ளார்.
அதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.