உள்நாட்டு செய்தி
வர்த்தகரின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அட்டகாசம் : கை, கால்களை கட்டி வைத்து தாக்குதல்
பாணந்துறையில் இன்று அதிகாலை வர்த்தகர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து குழுவினர் தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கைகளை கட்டி வயிற்றில் கத்தியால் குத்தி வீட்டில் இருந்த தங்க பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாணந்துறை – பெக்கேகம பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரின் மனைவியினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 2 மணியளவில் 3 பேர் வந்து தொழிலதிபர் வீட்டின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து தங்க வளையல்கள், மோதிரங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான வர்த்தகர் பாணந்துறை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் கைரேகை பரிசோதனை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்