உள்நாட்டு செய்தி
பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் இழுபறி : பின்னணியில் ஜனாதிபதி
இலங்கையின் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதை தடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலத்தை விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலக தரப்புக்களை கோடிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.எனினும் தேசபந்து தென்னகோனை அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்க பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மகிந்த தரப்பின் நிலைப்பாடு வெளியானதுஎவ்வாறாயினும், தென்னகோனின் மோசமான முன்னைய பதிவுகள், காரணமாக, அவர் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதை ஜனாதிபதி விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.தாக்குதலைத் தடுக்க தவறியமைமேலும் தேசபந்து தென்னகோன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையுடன்; நெருங்கிய தொடர்புடையவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.
2022ஆம் ஆண்டு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதலைத் தடுக்க தவறியமை தொடர்பில் தென்னகோன் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது குழுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது தென்னகோன் காலி முகத்திடலில் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதேவேளை தற்போதைய காவல்துறை அதிபர் சி டி விக்கிரமரத்ன, 2023 மார்ச் 26 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறவிருந்தார்.
எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டு தற்போது வரை அவர் பொலிஸ் மா அதிபராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.