Connect with us

வானிலை

கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு…!

Published

on

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கர்ப்பிணிகளுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

✅👉 அரச ஊழியர்களுக்கு விசேட கடன்…!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனவரி முதல் அரசு ஊழியர்களுக்கு அனர்த்த கடன் வழக்கம் போல் வழங்கப்படும் என தெரிவித்தார்.

✅👉 சிரேஸ்ட பிரஜைகளுக்காக 3,000 ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு…!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

சிரேஸ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை கொடுப்பனவு 3,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

06 மாதங்களுக்கு ஒருமுறை, அஸ்வெசும பயனாளர்கள் மதிப்பாய்வு செய்யப்படுவர்.

ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகையை 7,500 ஆக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

✅👉 ஓய்வூதியகாரர்களுக்கு 2,500 ரூபா அதிகரிப்பு…!

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார்.

✅👉 புதிய பல்கலைக்கழகங்கள் அமைக்க நடவடிக்கை…!

தொடர்ச்சியான விரிவான கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னையிலுள்ள பல்கலைக்கழகத்தை இலங்கையில் ஆரம்பிக்க திட்டம்.

4 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவுவ நடவடிக்கை.

2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

உள்ளூர், வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர சிறந்த வழிவகை.

அனைத்துப் மாணவர்களுக்கும் ‘சுரக்ஷா’ மாணவர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்…!

நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களையும் உள்ளடக்கும் வகையில் ‘சுரக்ஷா’ மாணவர் காப்பீட்டுத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு.

அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவு…!

2034 க்குள் அனைவருக்கும் ஆங்கிலக் கல்வி அறிவை வழங்கும் வகையில் 10 ஆண்டுத் திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.