உள்நாட்டு செய்தி
கட்டுநாயக்க விமான நிலைய மலசலகூடத்தில் மர்ம பொதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் மலசலகூடத்தில் தங்கத் தூள் அடங்கிய பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இன்று மதியம் 01:35 மணியளவில் சென்னைக்கு புறப்பட இருந்த ஏஐ 272 விமானத்தின் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பார்சல் இருப்பதை விமான ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.
இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததையடுத்து, விமானப்படையின் அதிகாரப்பூர்வ நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.பொதியில் தங்க தூள்பின்னர் அந்த பார்சலில் தங்கத்தூள் இருப்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.