உள்நாட்டு செய்தி
பாம்பு தீண்டியதில் 24 வயது ஆண் உயிரிழப்பு…!
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்,ஞாயிற்றுக்கிழமை (5) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(24) வயதுடைய இவர் ஒரு சில நாட்களின் முன்னர் திருமணமானவர் என அறியமுடிகின்றது. தனது தொழிலின் நிமிர்த்தம் பண்ணை உரிமையாளர் ஒருவருக்கு அவரின் மாடுகளை பராமரிப்பதற்காக புளுட்டுமானோடை பகுதியில் இங்குள்ள வாடியில் உறங்கிக்கொண்டிருக்கும் போது,வாந்தி மற்றும் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.