உள்நாட்டு செய்தி
65 வீட்டு பணிப்பெண்கள் பாதுகாப்பு நிலையங்களில் தஞ்சம்
பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையின் 65 வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் ரியாத் நகரங்களிலுள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 34 பேர் தங்கியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர், காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.ஐக்கிய அரபு இராச்சியத்தில் 24 பேரும் ஓமானில் 07 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.