உள்நாட்டு செய்தி
அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்: அமைச்சர் எச்சரிக்கை
நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்டறியும் வகையில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.