உள்நாட்டு செய்தி
அமெரிக்காவில் தொழில் தருவதாகக் கூறி,42 இலட்சம் ரூபா மோசடி : இராணுவ மேஜர் கைது..!
அமெரிக்காவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி தனது மனைவியுடன் இணைந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில்,இராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.பாணந்துறை கோரக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரான மேஜர் யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் உள்ள முகாமில் பணியாற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரி என பொலிஸார் தெரிவித்தனர்.பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு கிடைத்த 4 முறைப்பாடுகளின் அடிப்படையிலும், தெஹிவளை, மவுண்ட் உட்பட பல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையிலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் கடந்த 10 ஆம் திகதி விடுமுறையில் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்ற பணத்தை மனைவி மேஜர் கணக்கில் வரவு வைத்துள்ளது தெரிய வந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.