உள்நாட்டு செய்தி
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று வேலை நிறுத்தம்.. !
கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.கடந்த இரண்டு வருடங்களாக வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள போதிலும் அதிகாரிகள் தமது கொடுப்பனவுகளை அதிகரிக்கத் தவறியமை தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஏனைய செலவினங்களின் அதிகரிப்புக்கு இணையாக போக்குவரத்து கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாததால், பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிடத்தக்க நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.பெரும்பாலான பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று சேவையில் இருந்து விலகினாலும், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக வைத்தியசாலை ஆகியவற்றில் செயற்பாடுகள் பாதிக்கப்படாது என சங்கம் தெரிவித்துள்ளது., தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.