உள்நாட்டு செய்தி
பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு?
எரிபொருள், எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால்,
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (20) மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண திருத்தத்தின் காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும்,
ஆனால் அதிக செலவினங்களால் தற்போது பேக்கரி தொழில் நலிவடைந்துள்ளதாகவும் அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.