Connect with us

உள்நாட்டு செய்தி

இந்தியா – இலங்கை கப்பல் சேவை ரத்து

Published

on

இந்தியா – இலங்கைக்கு இடையேயான செரியபாணி கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் மூன்று நாட்களில் மாத்திரம் இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கப்பல் சேவையை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மாத்திரம் முன்னெடுப்பதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதனூடாக, இந்தியாவில் இருந்து 50 பயணிகளும், காங்கேசன்துறையிலிருந்து 30 பயணிகளும் செரியபாணி கப்பலில் பயணம் செய்தனர். இந்தநிலையில், போதிய அளவு பயணச்சீட்டு முன்பதிவு இல்லாத காரணத்தினால் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக குறித்த கப்பல் சேவையை முன்னெடுக்கும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *