உலகம்
இஸ்ரேல் போரால் மசகு எண்ணெய் விலை 5 சதவீதம் அதிகரிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயரத் தொடங்கி இருக்கிறது. இன்று காலை நிலவரப்படி மசகு எண்ணெய் விலையில் 5 சதவீதம் அதிகரித்தது. இது சர்வதேச பொருளாதார விவகாரங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. போர் நீடித்து மேலும் அதிகமாகும் சூழ்நிலையில் மசகு எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. மசகு எண்ணெய் விலை உயர்வால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும்.