உள்நாட்டு செய்தி
தேடப்படும் சந்தேக நபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் காயம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தேடப்படும் சந்தேக நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.பருத்தித்துறை அல்வாய் பிரதேசத்தில் வைத்து 27 வயதுக்கு மேற்பட்ட சந்தேக நபரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் தப்பிச் செல்லும் நோக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்க முற்பட்டதையடுத்து பொலிஸார் அவரை சுட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் தேடப்பட்டு வருபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.