உலகம்
ஆப்கான் நிலக்கடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உலகக்கோப்பையில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் தருகிறேன் – இளம் வீரர் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் சம்பளத்தை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
சுமார் 2,000க்கும் அதிகமானோர் பலியானதாக அஞ்சப்படும் நிலையில், இடிந்த கிராமங்களின் இடிபாடுகளுக்கு இடையில் உயிர் பிழைத்தவர்களுக்காக மீட்புப் படையினர் போராடி வருகின்றனர்.
முன்னதாக, தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை மேற்கோள் காட்டி, ’13 கிராமங்களில் 2,053 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 1,240 பேர் காயமடைந்தனர். 1,320 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன’ என ட்விட்டரில் எழுதினார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான ரஷீத் கான், உலகக்கோப்பையில் தனக்கு கிடைக்கும் முழு ஊதியத்தையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் மேற்கு மாகாணங்களை (Herat, Farah, Badghis) தாக்கிய நிலநடுக்கத்தின் துயரமான விளைவுகளைப் பற்றி நான் மிகுந்த சோகத்துடன் கற்றுக்கொண்டேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனது உலகக்கோப்பை போட்டிக் கட்டணம் அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன். விரைவில், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவளிக்கக்கூடியவர்களை அழைக்க நிதி திரட்டும் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம்’ என தெரிவித்துள்ளார்.