Connect with us

உலகம்

இஸ்ரேல் மீது தாக்குதல் பாலஸ்தீனிய ஆயுதக்குழு: மேயர் உட்பட 22 பேர் வரை பலி

Published

on

இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில், மேயர் ஒருவர் உட்பட 22 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் இன்று திடீர் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 22 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும், 545 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

rocket attack/ராக்கெட் தாக்குதல்

இந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து, ஜெருசலேம் உள்பட நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். போருக்கான தயார் நிலையை இஸ்ரேல் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில், Sha’ar Hanegev உள்ளூர் கவுன்சிலின் தலைவரான Ofir Liebstein என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில், பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஜீப்களில் வலம் வரும் காட்சிகள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.

rocket attack/ராக்கெட் தாக்குதல்

இந்த தாக்குதல் குறித்து பேசிய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரான Yoav Gallant, ஹமாஸ் இஸ்ரேலுக்கெதிராக போரை துவக்கி பெரும் தவறு செய்துவிட்டது என்றும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அனைத்து இடங்களிலும் எதிரியை எதிர்த்துப் போரிட்டுவருகிறார்கள் என்றும், இஸ்ரேல் இந்தப் போரில் வெல்லும் என்றும் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *