உள்நாட்டு செய்தி
நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கை-
நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வது தொடர்பில் உயர்மட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் 2024 டிசம்பர் மாதத்துக்கு முன்னரும், பொதுத் தேர்தல் 2025 ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னரும் நடத்தப்பட வேண்டும் .எனினும் முதலில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.