உள்நாட்டு செய்தி
கார் கவிழ்ந்து விபத்து !
ஹட்டன் – கொட்டகலையில் அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுஇந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா பகுதியிலிருந்து சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.காரின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார் என்பதோடு அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து திம்புல்ல பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.